Publish Date: Wed, 18 Aug 2021 (11:59 IST)
Updated Date: Wed, 18 Aug 2021 (12:05 IST)
4 நாட்களாக மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய காபூல் நகர சாலைகளில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் விலகி கொண்ட நிலையில் தலீபான்கள் மொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றியுள்ளனர். ஆப்கனில் தாலிபன்கள் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் பதற்றம் காரணமாக ஏராளமான மக்கள் வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வரும் நிலையில் அந்நாட்டின் பல்வேறு நகரங்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றன.
காபூலில் காய்கறி கடைகள், பழக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன. உணவு பொருட்களின் வரத்து குறைவு எதிரொலியாக விலை பன்மடங்கு உயர்ந்துவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். சில நாட்களில் இந்த விலை குறையும் என்று எதிர்ப்பர்க்கப்படுகிறது. 4 நாட்களாக மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய காபூல் நகர சாலைகளில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.