Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கொரோனா மறந்தாச்சு... இயல்பு நிலை வந்தாச்சு... திரையரங்கு என்ன ஆச்சு..?

Advertiesment
கொரோனா மறந்தாச்சு... இயல்பு நிலை வந்தாச்சு... திரையரங்கு என்ன ஆச்சு..?
, சனி, 5 செப்டம்பர் 2020 (08:17 IST)
திரையரங்கு என்ன ஆச்சு..? என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி எழுப்பி விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர். 

 
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மாஸ்டர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக விஜய் நடித்துள்ள விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். இவர்களோடு சாந்தனு பாக்யராஜ், விஜய் சேதுபதி, ஆன்ட்ரியா, கௌரி கிஷன் உள்ளிட்ட சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 
 
கடந்த ஏப்ரல் 9 ஆம் தேதியே வெளியாகவிருந்த இப்படம், கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளதால் ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இம்முறை தமிழகத்தில் பல தளர்வுகள வழங்கப்பட்டுள்ள்து. ஆனால் திரையரங்குகள் திறப்பு குறித்து தகவல் வெளியாகவில்லை. 
 
எனவே மதுரையில் விஜய் ரசிகர்கள், கொரோனா மறந்தாச்சு... இயல்பு நிலை வந்தாச்சு... திரையரங்கு என்ன ஆச்சு..? என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கேள்வி எழுப்பி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பொங்கலுக்குப் பிறகே விஜய்யின் அடுத்த படம்… அதுவரை ரசிகர்கள் பொங்கவேண்டாம்!