Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த அனுமதி! – இங்கிலாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த அனுமதி! – இங்கிலாந்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
, சனி, 11 டிசம்பர் 2021 (08:42 IST)
இங்கிலாந்து சிறையில் உள்ள ஜூலியன் அசாஞ்சேவை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு விக்கிலீக்ஸ் என்ற இணைய தளத்தில் அமெரிக்க அரசின் போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியானது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்கா பிடிக்க முயன்றது.

அவர் அமெரிக்காவில் இருந்து தப்பி இங்கிலாந்தில் உள்ள ஈகுவடார் தூதரகத்தில் தஞ்சமடைந்தார். அமெரிக்காவின் தொடர் கோரிக்கையால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தது இங்கிலாந்து அரசு. அசாஞ்சேவை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என தொடர்ந்து அமெரிக்கா கேட்டு வந்த நிலையில் அவரது உயிருக்கு அமெரிக்காவில் ஆபத்து என்ற வாதத்தை ஏற்று நாடு கடத்த அனுமதி வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இங்கிலாந்து கீழ் நீதிமன்றத்தின் இந்த நாடுகடத்தல் தடை உத்தரவை ரத்து செய்துள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் அவரை நாடுகடத்த அனுமதி அளித்துள்ளது. இதனால் விரைவில் அசாஞ்சே அமெரிக்கா கொண்டு செல்லப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இன்று முதல் சபரிமலையில் குளிக்கலாம், தங்கலாம்! – பக்தர்கள் மகிழ்ச்சி! கொரோனா கட்டுப்பாடுகளில் இருந்து மெல்ல தளர்வுகள் அளிக்கப்பட்டு வரும் நிலையில் சபரிமலை நிர்வாகம் மேலும் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. கொரோனா காரணமாக நாடு முழுவதும் பல கட்டுப்பாடுகள்