Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிகப்பட்ச வாக்குகள் பெற்று ஜோ பிடன் வரலாற்றுச் சாதனை !!!

Webdunia
வியாழன், 5 நவம்பர் 2020 (15:53 IST)
கடந்தசில மாதங்களாக உலகம் முழுவதும் பெரும்  உன்னிப்பாய்க் கவனித்து வந்த நிகழ்வு அமெரிக்க நாட்டின் அதிபர் தேர்தல்தான். இந்நிலையில் இத்தேர்தலில் அமெரிக்க வரலாற்றிலேயே அதிக மக்களின் வாக்குகளைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளார் அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சிசார்பில் போட்டியிட்ட ஜோ பிடன்.

இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் ஜோ பிடனும், துணை அதிபர் தேர்தலில் போட்டியிட்ட கமலா ஹாரிசும் சுமார் 7.2 கோடி வாக்குகளைப் பெற்று சாதனைப் படைத்துள்ளனர்.

குடியரசு  கட்சி சார்பில் போட்டியிட்ட  தற்போதைய அதிபர் டிரம்புக்கு சுமார் 6.86 கோடி மக்கள் வாக்களித்துள்ளனர்.

டிரம்புக்கும் ஜோ பிடனுக்கும் இடையே கடுமையாக பிரச்சாரமும் போட்டியிடும் நிலவிய நிலையில் இந்த வெற்றியால் ஜோ பிடனுக்கு வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இதற்கு முன் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஒபாமாவுக்கு 6.95 கோடி மக்கள் வாக்குகள் பெற்று சாதனை படைத்தார். இதுவே அதிக வாக்குகள் பெற்ற சாதனை என்றிந்த நிலையில், தற்போது ஜோ பிடன் அதைவிடக் கூடுதலாக 26 லட்சம் வாக்குகள் பெற்று வரலாற்றுச் சாதனைபடைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சாலையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுக்களை வீசிய நபர்.. தெலுங்கானாவில் பரபரப்பு..!

ராகுல் காந்தி மன்னிப்பு கேட்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும்: மத்திய அமைச்சர் எச்சரிக்கை..!

ராகுல்காந்திதான் என்னை தள்ளிவிட்டார்.. மண்டை உடைந்த பாஜக எம்.பி குற்றச்சாட்டு! நாடாளுமன்ற களேபரம்!

24 வயது இளம்பெண்ணை கடித்து குதறிய சிறுத்தை.. வேலூரில் அதிர்ச்சி சம்பவம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments