ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேரி இருந்தாலும் அமெரிக்கர்கள் மீது தாக்குதல் நடந்தால் பதிலடி கொடுப்போம் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் முழுவதும் திரும்ப பெறப்பட்ட நிலையில் தாலிபான்கள் நாட்டை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறியது குறித்து பேசியுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் “ஆப்கானிஸ்தானிலிருந்து லட்சக்கணக்கான மக்களை அமெரிக்க படைகள் வெளியேற்றியுள்ளது. போர் நோக்கத்தினால் அல்ல கருணையின் நோக்கத்தில்.. வரலாற்றில் அமெரிக்கா மட்டுமே இதை செய்துள்ளது.
அமெரிக்க மக்களுக்கு நான் வாக்களித்தபடி ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டு வந்துள்ளேன். அதேசமயம் அமெரிக்காவுக்கும், அமெரிக்க நட்பு நாடுகளுக்கும் தீங்கிழைக்கவும் நாங்கள் விடமாட்டோம். நாங்கள் மன்னிக்க மாட்டோம், மறக்க மாட்டோம். நாங்கள் உங்களை வேட்டையாடுவோம், நீங்கள் இறுதி விலையை செலுத்துவீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.