Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மனிதன் - விலங்கு கலப்பின கரு உற்பத்திக்கு ஜப்பான் அரசு அனுமதி! அதிர்ச்சியில் பொதுமக்கள்

Webdunia
வியாழன், 1 ஆகஸ்ட் 2019 (22:04 IST)
மனிதன் மற்றும் விலங்கு கலப்பின கருவை உருவாக்கும் ஆய்வுக்கு ஜப்பான் அரசு அனுமதி அளித்துள்ளது அந்நாட்டு மக்களை மட்டுமின்றி மனித இனமே அதிர்ச்சி அடைந்துள்ளது
 
மனிதனின் மூளையும் விலங்குகளின் பலமும் உடைய உயிரினங்களை கண்டுபிடித்து அவைகளை விண்வெளி ஆய்வுக்கு பயன்படுத்த ஜப்பானிய ஆய்வாளர்கள் முயற்சித்து வருகின்றன. இதுகுறித்த ஆய்வாளர்களின் முயற்சிக்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இதுபோன்ற ஒரு கலப்பினத்தை உருவாக்கும் முயற்சியில் ரஷ்யா ஈடுபட்டிருந்ததாகவும், ஆனால் அதன்பின்னர் அந்த முயற்சி கைவிடப்பட்டதாகவும் கூறப்படும் நிலையில் தற்போது ஜப்பான் நாடு இந்த முயற்சிக்கு அனுமதி அளித்துள்ளது
 
இந்த ஆய்வு வெற்றி பெற்றால் மனிதர்களுக்கு உறுப்பு மாற்று சிகிச்சை செய்யும்போது, தேவையான உறுப்புகளை விலங்குகளின் கருக்கள் மூலமாக வளர்த்தெடுக்க முடியும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இந்த மனித – விலங்கு கலப்பின கருவை உருவாக்கும் முயற்சிக்கு ஜப்பானின் பல்வேறு தரப்பினரிடம் இருந்து எதிர்ப்புகள் குவிந்து வருகிறது. இந்த எதிர்ப்பை மீறி அந்நாட்டின் ஆய்வாளர்கள் இந்த ஆய்வை தொடர்வார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருப்பதி அருகே எக்ஸ்பிரஸ் ரயிலில் தீ விபத்து: அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் இல்லை!

சிக்கன் பீஸ் சின்னதா இருக்குது.. கொலையில் முடிந்த திருமண விழா.. மணமக்கள் அதிர்ச்சி..!

இனி எம்பிக்கள் கையெழுத்து போட்டுவிட்டு கட் அடிக்க முடியாது: லோக்சபாவில் புதிய மாற்றம்..!

பாலியல் தொல்லையால் தீக்குளித்த கல்லூரி மாணவி.. பேராசிரியர் அதிரடி கைது..!

இன்று இரவு சென்னை உள்பட 11 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை எச்சரிக்கை..!

அடுத்த கட்டுரையில்
Show comments