நிலவை ஆய்வு செய்ய சமீபத்தில் இந்தியா மற்றும் ரஷ்யாவின் விண்கலங்கள் அனுப்பிய நிலையில் ரஷ்யாவின் விண்கலம் தோல்வி அடைந்தது என்பதும் இந்தியாவின் சந்திராயன் 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் தர இறங்கி பல தகவல்களை அனுப்பி வைத்து வருகிறது என்பது தெரிந்ததே.
தற்போது இந்திய, ரஷ்யாவை அடுத்து ஜப்பான் நிலவை ஆய்வு செய்யும் SLIM என்ற விண்கலத்தை இன்று அதிகாலை 4.40 மணிக்கு வெற்றிகரமாக அனுப்பி உள்ளது. இந்த விண்கலம் தற்போது சரியான புவி வட்ட சுற்றுப்பாதையில் சென்று கொண்டிருப்பதாக ஜப்பான் விண்வெளி மையத்திலிருந்து தகவல் வெளியாகி உள்ளது
இந்த விண்கலம் அடுத்த நான்கு மாதங்களில் நிலவை சென்றடையும் என்றும் நிலவில் பல்வேறு ஆய்வுகளை செய்யும் என்றும் கூறப்படுகிறது. இந்தியாவை அடுத்து ஜப்பானின் நிலவில் தரையிறங்குவதை வெற்றிகரமாக முடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.