நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 3 லேண்டர் இருப்பதை நாசாவின் லூனார் ஆர்பிட்டர் புகைப்படம் எடுத்துள்ளதை அடுத்து அந்த புகைப்படத்தை நாசா தற்போது வெளியிட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியாவின் இஸ்ரோ விஞ்ஞானிகள் அனுப்பிய சந்திராயன் 3 என்ற விண்கலம் வெற்றிகரமாக நிலவை அடைந்தது என்பதும் அதிலிருந்து விக்ரம் லேண்டெர் வெளியேறி புகைப்படங்களை அனுப்பியது என்பதும் தெரிந்ததே.
தற்போது சந்திரனில் சூரிய ஒளி இல்லை என்பதால் உறங்க வைக்கப்பட்டுள்ளது என்றும் மீண்டும் இன்னும் ஒரு சில நாளில் சூரிய ஒளி பட்டவுடன் இயங்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 3 லேண்டர் இருக்கும் இடத்தை நாசாவின் லூனார் ஆர்பிட்டர்படம் பிடித்து உள்ளது. இந்த படத்தை நாசா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது.
நிலவின் தென்துருவத்தில் இருந்து 600 கிலோ மீட்டர் தொலைவில் லேண்டர் நிலை கொண்டுள்ள புகைப்படத்தை நாசா வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது