ஜாக்கிசான் மகள் வெளியிட்ட வீடியோ - ரசிகர்கள் அதிர்ச்சி

Webdunia
புதன், 2 மே 2018 (16:22 IST)
தான் மிகவும் வறுமையில் இருப்பதாகவும், உதவி கேட்டும் நடிகர் ஜாக்கிசான் மகள் வெளியிட்ட வீடியோ ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 
ஹாங்காங் நடிகர் ஜாக்கிசான் படத்தில் இடம்பெறும் விறுவிறுப்பான சண்டைக் காட்சிகளுக்காகவே இவருக்கு கோடிக்கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார்.
 
அதே சமயம், 1998ம் ஆண்டு மிஸ் ஆசியா அழகிப்பட்டம் வென்ற எலைன் இ லீ என்ற பெண்ணுடன் ஜாக்கிசான் தொடர்பில் இருந்த வகையில் அவருக்கு ஒரு மகள் இருக்கிறார். இது பலருக்கும் தெரியாது. இதை ஜாக்கிசானும் ஒப்புக்கொண்டார். அவரின் மகளின் பெயர் எட்டா. 18 வயதாகும் எட்டா ஹாங்காங்கில் தனது தாயுடன் வசித்து வருகிறார். 
 
இந்நிலையில், எட்டா சமீபத்தில் எட்டா ஒரு வீடியோவை வெளியிட்டார். அவரும், அவரின் காதலியுமான ஆண்டி ஆட்டம்(31) இருவரும் இடம் பெற்ற அந்த வீடியோவில், நானும், எனது காதலி ஆண்டியும் கையில் பணம் இல்லாமல் மிகவும் கஷ்டப்படுகிறோம். தங்க இடமில்லாமல் சில சமயம் பாலத்திற்கு அடியில் தூங்குகிறோம். எங்களுக்கு யாரும் உதவி செய்யவில்லை. என் செல்போன் அழைப்பை எனது நண்பர்களே எடுப்பதில்லை. என்னையும், என் காதலியையும் பிரிக்க முயற்சி நடக்கிறது என உருக்கமாக பேசியுள்ளார்.

 
இந்த வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த செயலை அவரின் தாய் எலைன் கண்டித்துள்ளார். பணம் இல்லையேல் வேலைக்கு செல்ல வேண்டும். தேவையில்லாமல் அவரின் தந்தை ஜாக்கிசானின் பெயரை கெடுக்கும் இதுபோன்ற காரியங்களில் அவர் ஈடுபடக்கூடாது எனக் கூறியுள்ளார்.
 
தனது மகள் எட்டாவைக் காணவில்லை என எலைன் காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார். அந்த நிலையில்தான் இந்த வீடியோவை எட்டா வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப்பட்ட 9 சட்ட மசோதாக்களுக்கு அனுமதி.. ஆளுநர் ஆர்.என். ரவி கையெழுத்து..!

ஃபோர்டு நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்: ரூ.3250 கோடி முதலீட்டில் என்ஜின் உற்பத்தி!

சுவாமி தயானந்த சரஸ்வதி நினைவு நிகழ்ச்சி: பிரதமர் மோடி பேச்சு!

டெங்கு மற்றும் மழைக்கால நோய்த்தடுப்பு: சுகாதாரத்துறை தயார்நிலை குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!

மண்டல பூஜை, மகர விளக்கு திருவிழாவை முன்னிட்டு சபரிமலைக்கு சிறப்பு பேருந்துகள்.. தேதி அறிவிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments