ராகுலை கலாய்த்த மோடி ; பதிலடி கொடுத்த சித்தராமய்யா

Webdunia
புதன், 2 மே 2018 (15:53 IST)
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குறித்து பிரதமர் மோடி தெரிவித்த கருத்திற்கு கர்நாடக முதலமைச்சர் சித்தராமய்யா பதிலடி கொடுத்துள்ளார்.

 
கர்நாடகாவில் தேர்தல் நெருங்கி வருகிறது. வரும் மே 12 ஆம் தேதி தேர்தல் நடக்கிறது. அதன் பின்னர் மே 15 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று முடிவுகள் வெளியாக உள்ளது. எனவே, அங்கு தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது.
 
சமீபத்தில் கர்நாடகாவில் காங்கிரஸின் கோட்டை எனக்கூறப்படும் சந்தேமரஹள்ளி என்ற இடத்தில் பேசிய பிரதமர் மோடி “கர்நாடக மாநிலத்தில் உங்கள் அரசு செய்த சாதனையை 15 நிமிடங்கள் காகிதத்தில் எழுதி வைக்காமல் பேச முடியுமா?” என சவால் விடுத்தார்.

 
இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ள சித்தராமய்யா தனது டிவிட்டர் பக்கத்தில் “நான் உங்களுக்கு சவால் விடுகிறேன். எடியூரப்பா ஆட்சியில் இருந்த போது செய்த சாதனைகளை பேப்பரை பார்த்து உங்களால் 15 நிமிடம் பேசமுடியுமா?” என சவால் விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகளில் பெரும் மாற்றம்: 2026 முதல் அமல்!

காலையில் உயர்ந்த தங்கம் மாலையில் மீண்டும் உயர்வு.. ஒரு லட்சத்தை தொட இன்னும் 1040 ரூபாய் தான்..

விஜய்யின் ஈரோடு பொதுக்கூட்டம்.. தேதி, நேரத்தை அறிவித்த செங்கோட்டையன்..!

ரூ.45 கோடி செலவில் கட்டப்பட்டு வந்த பாலம் திடீரென இடிந்தது.. 5 பேர் காயம்..!

நீதிபதி சுவாமிநாதனுக்கு ஆதரவாக களமிறங்கிய 56 ஓய்வுபெற்ற நீதிபதிகள்: அரசியல்வாதிகளுக்கு கண்டனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments