சிரியாவில் அரசு தரப்பிற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் மத்தியில் போர் நடைபெற்று வருகிறது. சிரிய அரசுக்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டு வருகிறது.
இருதரப்பினருக்கும் இடையேயான போர் காரணமாக மக்கள் காரணமின்றி தங்களது உயிரைவிட்டு வருகின்றனர். இதில் குழந்தைகள், பெண்கள் என அனைவரும் அடக்கம்.
சமீபத்தில் சிரியாவில் நடத்தப்பட்ட ராசாயன தாக்குதலால் பல குழந்தைகள் முச்சிதிணறி உயிர் இழந்தனர். இதனால், கோபம் அடைந்த டிரம்ப், சிரியா மற்றும் ரஷ்யா மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார்.
அதன்படி அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து சிரியாவில் உள்ள ராசாயன் ஆலைகளை அழிக்கும் பொருட்டு தாக்குதல் நடத்தினர். இனி இப்படி நடந்தால் மேலும் தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலையில், சிரியாவின் கோர நிலையை விவரிக்கும் வகையில் பார்வையற்ற சிறுமி ஒருவர் பாடல் ஒன்றை பாடியுள்ளார். தர்போது இந்த பாடல் டிரெண்டாகி வருகிறது.
சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வரும் இந்த பாடல் காட்சி மிகவும் உருக்கமானதாகவும், பார்ப்பர்களை அழ வைப்பதாகவும் உள்ளது. இதோ அந்த பாடல் வீடியோ...