Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

திருமண வீட்டில் இசை நிகழ்ச்சிகளுக்கு தடை - தாலிபான்கள் உத்தரவு

திருமண வீட்டில் இசை நிகழ்ச்சிகளுக்கு தடை  -  தாலிபான்கள் உத்தரவு
, செவ்வாய், 13 ஜூன் 2023 (22:22 IST)
ஆப்கானிஸ்தானில் தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் பல புதிய அறிவிப்புகள் வெளியிட்டு வருகிறது. அதன்படி, திருமண வீட்டில் இசை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021 ஆம் ஆண்டு அமெரிக்கப் படைகள் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து, ஆப்கானிஸ்தான் தாலிபான்களுக்குச் சென்று, அவர்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது.

பழமைவாதிகளாக இவர்களின் ஆட்சியில் பல கட்டுப்பாடுகள் இன்றைய காலத்திற்குப் பொருந்தாதபடி உள்ளன. இதனால், மக்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில்,  ஏற்கனவே பெண் குழந்தைகள் பள்ளிகள், கல்லூரிகளுக்குச் செல்வது முற்றிலும் தடை செய்யப்பட்டது.

அதேபோல், சினிமா, ஆடல் பாடல் நிகழ்ச்சிளுக்கும் தடை விதிக்கப்பட்டது.

அங்கு,  நல்லொழுக்கம் பரப்புதல், தீமைகளை தடுத்ததல் என்ற நோக்கத்தில் ஒரு அமைச்சரவை இயங்குகிறது. இந்த அமைச்சரவையில் ஒரு புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில், திருமண வீடுகளில் இசை நிகழ்ச்சிகள் நடத்தக்கூடாது என்றும் மனிதர்கள் மட்டுமே பாடல்கள் பாட வேண்டும். அது இறைவனை மட்டுமே புகழ வேண்டும் என்று கடுமையான  உத்தரவிட்டுள்ளனர்.

கொண்டாட்டங்கள் இல்லாதது திருமண வீடா, துக்க வீடா என்று மக்கள் புலம்பி  வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ரூ. 4,000 க்கு வாங்கிய நாற்காலியை ரூ. 82 லட்சத்திற்கு விற்ற பிரபலம்!