இஸ்ரேலில் அந்நாட்டு பிரதமர் தன் சொந்த செலவுகளுக்கு மக்கள் வரி பணத்தை செலவளித்தது விமர்சனத்தை ஏற்படுத்திய நிலையில் தனது தவறை அவர் ஒப்புக் கொண்டுள்ளார்.
இஸ்ரேலில் பிரதமராக தற்போது இருப்பவர் நப்தாலி பென்னட். இவர் ஆட்சிக்கு வந்தது முதலாக தனது அதிகாரப்பூர்வ இல்லத்திற்கு மக்கள் வரி பணத்தில் இருந்து செலவு செய்வதாக செய்தி நிறுவனம் ஒன்று செய்தி வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
பிரதமர் பென்னட் ஒவ்வொரு மாதமும் தோராயமாக 26,400 அமெரிக்க டாலர்களை சொந்த விஷயங்களுக்காக செலவு செய்துள்ளார். ஆனாலும் இது விதிகளுக்கு உட்பட்டதுதான் என அவர் நியாயப்படுத்தினார். அதற்கு மக்களிடையே கடும் விமர்சனம் எழுந்துள்ளது.
இதனால் தனது தவறை ஒப்புக்கொண்ட பிரதமர் பென்னட் இனி தன் வீட்டு செலவுகளை தனது சொந்த பணத்தில் பார்த்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். பிரதமர் பணிக்காக அவருக்கு மாதம் 16,500 அமெரிக்க டாலர்கள் சம்பளமாக வழங்கப்படுகிறது.