Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்ரேல் - பாலத்தீனம் இடையே போர்: அமெரிக்காவின் கருத்துக்கு துருக்கி அதிபர் எதிர்ப்பு

Webdunia
வெள்ளி, 13 அக்டோபர் 2023 (21:00 IST)
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் இஸ்ரேலை ஒரு வெளியுறவு அமைச்சராக அல்லாமல் யூதராக அணுகுவதாக கூறியதற்கு துருக்கி அதிபர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே நீண்ட காலமாக மோதல் நிகழ்ந்து வரும் நிலையில் சமீபத்தில் பாலஸ்தீன ஆதரவு அமைப்பு ஹமாஸ்  இஸ்ரேல் மீது சுமார் 5 ஆயிரம் ராக்கெட்டுகளை வீசி தாக்கியதுடன், இஸ்ரேல் எல்லைக்குள் தரை வழி, வான் வழி க்ளைடர்கள் வழியாகவும் நுழைந்து ஏராளமானோரை சுட்டுக் கொன்றதுடன், பலரை பணைய கைதிகளாக கடத்தி சென்றனர் .

இதற்கு பதிலடியாக ஹமாஸ் ஆக்கிரமிப்பு பகுதியான காசா முனை மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ளது.

இருதரப்பினர் இடையே தாக்குதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், உலக நாடுகள் அதிர்ச்சியடைந்துள்ளன. இதனால் பலர் உயிரிழந்துள்ளனர். மக்கள், உணவு, இருப்பிடம், நீர் இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில்,  அமெரிக்க வெளியுறவு அமைச்சர் பிளிங்கன் இஸ்ரேலை ஒரு வெளியுறவு அமைச்சராக அல்லாமல் யூதராக அணுகுவதாக கூறினார்.

இதற்கு துருக்கு அதிபர் எர்டோகன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில், இது என்ன வகையான அணுகுமுறை? நான் ஒரு முஸ்லிமாக இப்பகுதியை அணுகுகிறேன் என்று யாராவது சொன்னால் என்ன சொல்வீர்கள் என்றும், எல்லோரையும் மனிதராக அணுக வேண்டும் என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

800 மதுப்பாட்டில்களையும் குடித்து தீர்த்த எலிகள்? - எலிகளை கைது செய்ய கோரிக்கை!

ஐ.ஏ.எஸ் அதிகாரி போல் நடித்த தண்ணீர் விற்பனையாளர்.. ரூ.21.65 லட்சம் தொழிலதிபரிடம் மோசடி..!

தொடரும் அறங்காவலர் பஞ்சாயத்து! குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் ஆடித்திருவிழா ரத்து!

கணவரை விட மனைவி அழகு.. மொட்டையடித்து அசிங்கப்படுத்திய குடும்பத்தினர்.. விரக்தியில் கைக்குழந்தையுடன் பெண் தற்கொலை..!

உங்களுடன் ஸ்டாலின் என்பதற்கு பதில் பொய்களுடன் ஸ்டாலின் என்பதுதான் பொருத்தமாக இருக்கும்: ஜெயகுமார்

அடுத்த கட்டுரையில்
Show comments