அமெரிக்காவில் இப்போது கொரோனா பாதிப்பு நாள் ஒன்றுக்கு 1.5 லட்சத்துக்கு மேல் செல்வதாக சொல்லப்படுகிறது.
கொரோனா முதல் அலை பரவலில் கடுமையாக பாதிக்கப்பட்டது அமெரிக்காதான். அங்கு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் பாதிக்கப்பட்டௌ உயிரிழந்தனர். ஆனால் அதன் பின் சுதாரித்த அமெரிக்கா தடுப்பூசி போட்டு பரவலைக் கட்டுப்படுத்தியது. இந்நிலையில் இப்போது அங்கு உருமாறிய டெல்டா வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது.
கடந்த சில தினங்களாக இந்த பரவல் அதிகமாகியுள்ள நிலையில் இப்போது அங்கு மூன்றாவது அலை தொடங்கி விட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. தினசரி பாதிப்பு அங்கு 1.6 லட்சத்துக்கு மேல் உள்ளதாகும் சில தினங்களுக்கு முன்னதாக ஒரே நாளில் 800க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் அங்கு மூன்றாவது அலை தொடங்கி விட்டதோ என்ற அச்சம் எழுந்துள்ளது.