Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாலைகளில் 500 சிங்கங்களை உலவவிட்டதா ரஷ்ய அரசு – சமூகவலைதளங்களில் பரவும் புகைப்படம் ! #FactCheck

சாலைகளில் 500 சிங்கங்களை உலவவிட்டதா ரஷ்ய அரசு – சமூகவலைதளங்களில் பரவும் புகைப்படம் ! #FactCheck
, திங்கள், 23 மார்ச் 2020 (07:48 IST)
கொரோனா பீதி காரணமாக மக்கள் வீதிகளில் நடமாடுவதைத் தவிர்க்கும் விதமாக 500 சிங்கங்களை சாலைகளில் ரஷ்ய அரசு உலவவிட்டுள்ளதாக வதந்தி ஒன்று பரவி வருகிறது.

கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் மக்கள் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டு வருகின்றனர். அரசுகளும் மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரித்து வருகின்றனர். இந்நிலையில், ரஷ்ய மக்கள் வீடுகளில் இருந்து வெளியே வருவதை தடுக்க அந்நாட்டின் அதிபர் புதின் 500- சிங்கங்களை வீதிகளில் திறந்து விட்டுள்ளதாக ஒரு செய்தியும் அது சம்மந்தமாக சிங்கள் நடு சாலையில் தனியாக நடக்கும் புகைப்படம் ஒன்றும் வெளியாகியுள்ளது.

இதைப் பலரும் பரப்பி வர இந்த செய்தி உண்மையில்லை என்று தெரியவந்துள்ளது. அந்த புகைப்படம் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரத்தில் படப்பிடிப்பின் போது பயன்படுத்தப்பட்ட கொலம்பஸ் என்ற சிங்கம் எனத் தெரியவந்துள்ளது. இது சம்மந்தமாக 2016 ஆம் ஆண்டு செய்தித்தாள்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அந்த புகைப்படத்தைதான் இப்போது ரஷ்ய அரசுக்கு எதிரான செய்தியாக பலரும் பரப்பி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

முகக் கவசத்தை பதுக்கினால் குண்டர் சட்டம்: தமிழக அரசு அதிரடி