Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கரண்ட் பில்! கடந்த மாத தொகையையே கட்டலாம் – மின்வாரியம் அறிவிப்பு

Advertiesment
கரண்ட் பில்! கடந்த மாத தொகையையே கட்டலாம் – மின்வாரியம் அறிவிப்பு
, ஞாயிறு, 22 மார்ச் 2020 (16:12 IST)
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்வதால் மின்கட்டணம் செலுத்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு மின்சார வாரியம்.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ள மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதால் மாதம்தோறும் மின் கணக்கீடு எடுக்கும் பணி இந்த முறை செய்யப்படவில்லை.

அதனால் மக்கள் கடந்த ஜனவரி அல்லது பிப்ரவரி மாதத்தில் செலுத்திய மின் கட்டண தொகை அளவையே மார்ச் மாத மின்கட்டணமாக கட்டலாம் என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது. கூடுமானவரை மக்கள் கூடுதலை தவிர்க்க அரசு வலியுறுத்தியுள்ள நிலையில் ஆன்லைன் மூலம் பணம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. மேலும் மின்கட்டணம் செலுத்த அளிக்கப்படும் கடைசி நாள் நீட்டிக்கப்பட்டால் உதவியாக இருக்கும் என கடை உரிமையாளர்கள் மற்றும் வியாபாரிகள் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இந்தியாவில் மேலும் ஒரு கொரோனா பலி: எண்ணிக்கை 7ஆக உயர்வு