Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நீண்ட ஆயுளை பெற.. ஒரு நாளைக்கு இவ்வளவு நடந்தால் போதுமா? - ஆய்வில் தகவல்!

Prasanth Karthick
வெள்ளி, 12 ஜூலை 2024 (10:15 IST)

தினசரி உடல் ஆரோக்கியத்திற்கும், நீண்ட காலம் வாழவும் ஒரு நாளைக்கு எவ்வளவு நடக்க வேண்டும் என்பது குறித்து போலந்து மற்றும் அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஆய்வு செய்துள்ளன.

உணவு முறை மாற்றம், உடல் சார்ந்த பழக்க வழக்க மாற்றங்கள் காரணமாக சமீப காலத்தில் குறுகிய காலத்திலேயே திடீர் மரணங்கள் ஏற்படுவது அதிகரித்து வருகிறது. அதனால் உடலை தொடர் இயக்க நிலையில் வைத்திருக்க தினசரி நடைப்பயிற்சியாவது மேற்கொள்ள வேண்டும் என பல மருத்துவ நிபுணர்களும் அறிவுறுத்தி வருகின்றனர்.

பெரும்பாலும் தினசரி 10 ஆயிரம் அடிகள் நடந்தால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம் என பலரும் அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தினசரி எவ்வளவு அடிகள் நடந்தால் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்பது குறித்து போலந்து நாட்டின் லோட்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் மற்றும் அமெரிக்காவின் ஆன்ஸ் ஹாப்கின்ஸ் மருத்துவ பல்கலைக்கழகம் இணைந்து ஆய்வுகளை நடத்தியுள்ளனர்.
 

ALSO READ: சட்டப்படிப்புகளில் பாடமாக மனுஸ்மிருதி.. டெல்லி பல்கலை. பரிந்துரை! - வெடித்தது சர்ச்சை!

இதில் உலகம் முழுவதிலும் 2,26,000 நபர்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வுகளின் அடிப்படையில் முன்கூட்டியே இறப்பதற்கான அபாயத்தை குறைக்க தினசரி 4 ஆயிரம் அடிகள் நடந்தால் போதுமானது என கூறப்பட்டுள்ளது. இதயம், ரத்த நாளங்கள் சிறப்பாக செயல்பட தினசரி 2,300 அடிகளுக்கு மேல் நடந்தால் போதுமானது என்றும், 4 ஆயிரம் அடிகளுக்கு மேல் நடந்தால் இறக்கும் அபாயம் 15 சதவீதம் குறைவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

நடைபயிற்சியுடன் கூடிய ஆரோக்கியமான உணவு முறையும் இதய ஆபத்துகளை குறைப்பதற்கும், ஆயுளை நீட்டிபதற்கும் முக்கிய பங்காற்றுவதாக லோட்ஸ் பல்கலைக்கழக பேராசிரியர் மசீஜ் பனாச் கூறியுள்ளார்.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தவெக கொடிகள், துண்டுகள்.. திருப்பூரில் குவியும் ஆர்டர்கள்..!

அமெரிக்க தேர்தலில் வெற்றி எதிரொலி: தெலுங்கு டிரம்ப் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

நான் கேட்காமலேயே வரதட்சணை கொடுத்தனர்.. மனைவி குடும்பத்தின் மீது மாப்பிள்ளை வழக்கு..!

இன்றிரவு 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் தகவல்..!

சென்னை ரிப்பன் மாளிகையை சுற்றி பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி: முழு விவரங்கள்..!

அடுத்த கட்டுரையில்
Show comments