ஈரான் எச்சரிக்கை! இஸ்ரேலை சுற்றி கப்பலை நிறுத்தும் அமெரிக்கா! - என்ன நடக்கிறது?

Prasanth K
வியாழன், 19 ஜூன் 2025 (11:01 IST)

ஈரான் - இஸ்ரேல் பிரச்சினையில் ஈரானை சரணடைய சொன்ன அமெரிக்காவையுமே ஈரான் எச்சரித்த நிலையில் அமெரிக்கா போரில் களம் இறங்குகிறதா என்ற பரபரப்பு எழுந்துள்ளது.

 

ஈரான் - இஸ்ரேல் இடையே போர் மூண்ட நிலையில் இருநாடுகளும் ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன. முக்கியமாக இஸ்ரேல், ஈரானின் அணு ஆயுத தளங்களை குறி வைத்து தாக்கி வருகிறது.

 

நேற்று ஹைபர் சோனிக் ஏவுகணைகளை இஸ்ரேல் மீது வீசிய ஈரான், போர் தொடங்கிவிட்டது என சூளுரைத்தது. அதை தொடர்ந்து ஈரானை எச்சரித்த அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், ஈரான் போரை நிறுத்திவிட்டு நிபந்தனையின்றி சரணடைய வேண்டும் என கூறினார்.

 

அதற்கு பதில் எச்சரிக்கை விடுத்த ஈரான், இந்த போரில் அமெரிக்கா தலையிட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரித்தது. அதை தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆதரவாக மத்திய கிழக்குப் பகுதிகளில் அமெரிக்க ராணுவ பலத்தை அதிகரித்து வருகிறது. இஸ்ரேல் கடல் பகுதியில் அமெரிக்க ராணுவ கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

 

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிரம்ப் நிறுத்தியதாக கூறப்பட்ட இஸ்ரேல் - பாலஸ்தீன போர் மீண்டும் வெடித்தது.. 100 பேர் பலி..!

யாருடன் கூட்டணி.. தவெக நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் முக்கிய தகவல்..!

அமலாக்கத் துறை கூறிய நகராட்சி பணி நியமன ஊழல் குற்றச்சாட்டு: அமைச்சர் கே.என். நேரு மறுப்பு

காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்.. திமுக அரசை விமர்சனம் செய்த நயினார் நாகேந்திரன்

வாக்குகளுக்காக மோடி நடனமாடவும் தயங்க மாட்டார்: ராகுல் காந்தி விமர்சனம்!

அடுத்த கட்டுரையில்
Show comments