Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்: ஈரான் வாழ் இந்தியர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!

Mahendran
சனி, 14 ஜூன் 2025 (16:42 IST)
ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர் மேகங்கள் சூழ்ந்திருக்கும் நிலையில், ஈரானில் வசிக்கும் இந்தியர்களுக்காக அவசர உதவி எண்களை மத்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.
 
உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால், ஈரானில் உள்ள இந்திய தூதரகத்தின் அவசர எண்களான 98 9128109115 மற்றும் 98 9128109109 ஆகியவற்றை தொடர்பு கொள்ளலாம். அத்துடன், ஈரானில் உள்ள இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், தேவையற்ற பயணங்களை தவிர்த்து பாதுகாப்பாக இருக்குமாறும் வெளியுறவுத்துறை கேட்டுக் கொண்டுள்ளது.
 
இஸ்ரேல், ஈரானின் முக்கிய அணு ஆயுதத் தளங்கள், ஏவுகணை உற்பத்தி ஆலைகள் மற்றும் ராணுவத் தளங்கள் மீது வெள்ளிக்கிழமை தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக, ஈரானும் இஸ்ரேலின் பல பகுதிகள் மீது நள்ளிரவு முதல் அதிகாலை வரை ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியது.
 
 "எங்களுக்கு எதிரான அச்சுறுத்தல் நீங்கும் வரை தாக்குதல் தொடரும்" என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அறிவித்திருப்பது, இரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உத்தரகாண்ட் நிலச்சரிவு.. 28 பேர் கொண்ட கேரளா குழுவை காணவில்லை.. உறவினர்கள் அதிர்ச்சி..!

’கிங்டம்’ தமிழர்களுக்கு எதிரான படமா? தயாரிப்பு நிறுவனத்தின் விளக்கம்..!

அரசு திட்டத்தில் முதல்வர் பெயர் போடலாம்.. வழக்கு போட்ட சிவி சண்முகத்திற்கு அபராதம்.. சுப்ரீம் கோர்ட்..!

ரக்‌ஷாபந்தன்: பிரதமர் மோடிக்கு 30 ஆண்டுகளாக ராக்கி கட்டும் பாகிஸ்தான் பெண்!

30 ஆயிரம் கிராமங்களில் இருந்து 50 ஆயிரம் விளையாட்டு வீரர்கள்! - களைகட்டும் ஈஷா கிராமோத்சவம் போட்டிகள்!

அடுத்த கட்டுரையில்
Show comments