கொரோனா பாதிப்பால் ஈரானின் 10 நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பாதா அந்நாட்டு தரப்பில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் உலக முழுவதும் அதிகப்படியான உயிர் பலிகளை கொடுத்து வருகிறது. இதுவரை 170 நாடுகளுக்கு மேல் பரவியுள்ள இந்த வைரஸால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,000-த்தை கடந்து உள்ளது. சீனாவில் தற்போது கொரோனா கட்டுக்குள் வந்துள்ள நிலையில், இத்தாலி மற்றும் ஈரான் போன்ற நாடுகள் அதிக பாதிப்பை சந்தித்து வருகின்றன.
இந்நிலையில், ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 10 நிமிடத்திற்கு ஒருவர் உயிரிழப்பதாகவும், ஒரு மணி நேரத்திற்கு 50 பேர் பாதிக்கப்படுகின்றனர் எனவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அதிர்ச்சி தகவல் வெளியிட்டுள்ளது.
ஈரான் மீது பொருளாதார நடவடிக்கை விதிக்கப்பட்டுள்ளதால் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் அந்நாடு சீனா, இந்தியா போன்ற நாடுகள் தங்களுக்கு உதவ முன்வரும்படி கோரியுள்ளது.