Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அமெரிக்காவை எதிர்க்குமா இந்தியா? அதீத நம்பிக்கையுடன் ஈரான்

Webdunia
வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (15:03 IST)
2015 ஆம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபராக இருந்த பராக் ஒபாமா தனது ஆட்சிக் காலத்தில் ஈரான் உள்ளிட்ட 6 வல்லரசு நாடுகளுடன் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.  
ஆனால், அவரது பதவிக்காலம் முடிந்து டிரம்ப் பதவியேற்றதும் இது பைத்தியக்காரத்தனமான ஒப்பந்தம் என்று கூறி அதில் இருந்து விலகினார். மேலும், ஈரான் மீது பல பொருளாதாரத் தடைகளை விதித்தார்.  
 
மேலும், இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் மாதத்துக்குள் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று அமெரிக்கா தரப்பில் மிரட்டலும் விடப்பட்டது. 
 
இந்நிலையில், இன்று ஈரான் இந்தியாவின் நிலை குறித்து தெரிவித்துள்ளது பின்வருமாறு, கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் எங்களுடைய இந்திய நண்பர்கள் பொருளாதார ரிதியாக தொடர்ந்து எங்களுக்கு ஒத்துழைப்பு அளிப்பார்கள். 
 
இதே கருத்தைதான் இந்திய அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர். எரிபொருளை பொறுத்தவரை ஈரான் எப்போது இந்தியாவின் நம்பகமான ஆதார சக்தியாக இருந்திருக்கிறது. ஈரானுடனான உறவை விரிவாக்கவே இந்தியா விரும்புகிறது என தெரிவித்துள்ளது. 
 
ஏற்கனவே, அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடைகளையும் மீறி ஈரானுடன் கச்சா எண்ணெய் உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர். 
 
இப்போது, இந்திய அரசு இது குறித்து என்ன முடிவெடுக்கும் என தெரியவில்லை. ஏற்கனவே, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால், இன்னும் ஒரே மாதத்தில் இந்தியாவின் முடிவு பெரும் மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. ஆனால், இந்த மாற்றம் நன்மைக்கானதா என்பதே சந்தேகம்.

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments