Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் வீரர்கள் விவரம்.

ஆசியக்கோப்பை இறுதிப்போட்டியில் விளையாடும் வீரர்கள் விவரம்.
, வெள்ளி, 28 செப்டம்பர் 2018 (14:58 IST)
துபாயில் ஆசியக்கோப்பையின் இறுதிப் போட்டி இன்று இந்தியா வங்கதேச அணிகளுக்கு இடையில் நடைபெற உள்ளது. இரு அணியிலும் விளையாடும் 11 வீரர்கள் யார் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்தியா ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தனது முக்கிய வீரர்களுக்கு ஓய்வு கொடுத்து இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தது. எனவே இப்போது இறுதிப்போட்டியில் ஒய்வளிக்கப்பட்ட வீரர்களை திரும்ப அணியில் சேர்த்துக் கொண்டு களமிறங்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற போட்டியில் பௌலிங்கில் செய்த மாற்றங்கள் பலனளிக்காததால் சிதார்த் கௌல் மற்றும் கலீல் அகமது இடம்பெற மாட்டார்கள் அவர்களுக்கு பதிலாக ஜாஸ்பிரித் பூம்ரா மற்றும் புவனேஷ்குமார் திருமப அழைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

பேட்டிங்கில் ராகுல் சிறப்பாக செயல்பட்டாலும் ஏற்கனவே தவான் – ரோஹித் இணை சிறப்பாக செயல்பட்டு வருவதால் அவருக்கு இன்று வாய்ப்பு கிடைப்பது கடினம்தான். ஒருவேளை கேதர் ஜாதவை நீக்கிவிட்டு ராகுலை பின் வரிசையில் இறக்க வாய்ப்புள்ளது. மனீஷ் பாண்டேவும் இந்த போட்டியில் விளையாடுவது சந்தேகமே.

வங்கதேச அணியைப் பொறுத்தவரை அந்த அணி முந்தைய போட்டியில் வலுவான பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்றுள்ளதால் அந்த அணி மாற்றம் ஏதுமின்றியே களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா உத்தேச அணி: ரோஹித் ஷர்மா, தவான், அம்பாத்தி ராயுடு, எம் எஸ் தோனி, தினேஷ் கார்த்தி, கேதார் ஜாதவ்/ ராகுல், ஜடேஜா, புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ், யஷ்வேந்திர சஹால், ஜாஸ்பிரித் பூம்ரா

வங்கதேச உத்தேச அணி: லிடன் தாஸ், சௌமியா சர்கார், மோமினல் ஹக், முஷ்பிஹீர் ரஹீம், முகமது மிதுன், மகமதுல்லாஹ், கையீஸ், மோர்ட்டஸா(கே), ருபெல் ஹூசைன், முஸ்தாபிஸுர் ரஹ்மான், மெஹிடி ஹசன்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆசியக்கோப்பை இறுதிபோட்டி: இந்தியா vs வங்கதேசம் சில புள்ளிவிவரங்கள்