Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆண்கள் தினத்தை மறந்து வஞ்சிப்பது ஏன்? வாங்க கொண்டாடுவோம்!!!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (10:34 IST)
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 ஆம் தேதியான இன்று உலக ஆண்கள் தினம் கொண்டாப்பட்டுகிறது.
 
உலகில் உள்ள ஆண்களை கௌரவப்படுத்தும் விதமாகவும், ஆண்களின் உரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கருதியும் ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இச்சமூகத்தில் ஆண்களின் பங்கு என்பது மிகமிக முக்கியம். 
 
ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 19 ஆம் தேதி உலக ஆண்கள் தினம் (International Men's Day) கொண்டாடப்பட்டு வருகிறது. 1999 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸில் உள்ள ட்ரினிடாட் & டொபாகோவில் இது தொடங்கப்பட்டது. ஐ.நா-வால் அங்கீகரிக்கப்பட்ட தினமாகவும் இந்த தினம் விளங்குகிறது. 
 
உலகெங்கிலும் 60 நாடுகளில் ஆண்கள் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், கனடா, ஹங்கேரி போன்றவற்றை உள்ளடக்கிய உலகின் 70 க்கும் மேற்பட்ட நாடுகளால் இந்த நாள் கொண்டாடப்படுகிறது.
 
குடும்பத்தினருடைய தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைக்கும் பொறுப்பு ஆண்களுக்கு அதிகம். குடும்பம் மற்றும் அலுவலகம் என இரண்டையும் சமாளிக்கும் ஆண்களுக்கான பிரச்சினைகளை களைவதற்கும், அவர்களின் மனம் மற்றும் உடல் நலத்தை பேண ஊக்குவிக்கும் விதமாக இந்த தினம் கொண்டாடப்படுகிறது. 
 
சர்வதேச பெண்கள் தினத்தை உலகமே சேர்ந்து கொண்டாடும். ஆனால், ஆண்கள் தினம் என்ன தேதியென்று இங்கு நிறைய பேருக்கு தெரிவதில்லை. அந்த அளவிற்கு இருக்கிறது ஆண்களின் நிலைமை. இதுவரை நடந்தது போகட்டும் இனி காலம் மாறட்டும், இனி ஆண்களையும் கொண்டாடுவோம்.  ஆண்கள் தின வாழ்த்துக்கள் ஆண்களே!!! 

தொடர்புடைய செய்திகள்

கை, கால்களில் கட்டப்பட்டிருந்த கம்பி.. ஜெயக்குமார் கொலை வழக்கில் திருப்பம்!

அகிலேஷ் யாதவ் சென்ற கோவிலை கங்கை நீர் கொண்டு சுத்தம் செய்த பாஜகவினர்..! ஷூ அணிந்தபடி வந்ததாக புகார்..!

தடையற்ற மும்முனை மின்சாரமா? முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் அமைச்சர்.! அன்புமணி விமர்சனம்.!!

கடன் வாங்கிய மாணவரின் உறுப்பில் கல்லைக் கட்டி தொங்கவிட்டு கொடூரம்! – உத்தரபிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்!

திடீரென குடும்பத்துடன் வெளிநாட்டுக்கு சென்ற பினராயி விஜயன்.. காங்கிரஸ் கடும் விமர்சனம்..!

அடுத்த கட்டுரையில்
Show comments