Webdunia - Bharat's app for daily news and videos

Install App

திமுக போல நாங்களும் சர்வே எடுத்து வெச்சிருக்கோம்! – தொகுதி பங்கீடுக்கு ரெடியாகும் காங்கிரஸ்!

Webdunia
வியாழன், 19 நவம்பர் 2020 (10:27 IST)
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் காங்கிரஸின் செல்வாக்கு குறித்து சர்வே ரிப்போர்ட் தயாரித்துள்ளதாக கார்த்திக் சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் திமுகவுடனான கூட்டணியில் நீடிக்க விருப்பம் தெரிவித்துள்ளது. மேலும் தொகுதிகளை கண்டிப்பாக இவ்வளவு என்று கேட்காமல், அளிக்கப்படும் தொகுதிகளில் சிறப்பாக செயல்படவும் உத்தேசித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள கார்த்திக் சிதம்பரம் “திமுக ஐபேக் மூலமாக தமிழகம் முழுவதும் சர்வே எடுத்துள்ளது போல காங்கிரஸும் சர்வே எடுத்துள்ளது. இதன்மூலம் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு எந்த தொகுதிகளில் அதிக செல்வாக்கு உள்ளது என்பதை திமுக கூட்டணி விவாதத்தில் தெரிவிப்போம். இத்தனை தொகுதி வேண்டும் என்று எண்ணிக்கையில் கோரப் போவதில்லை. கூட்டணியின் வெற்றி மட்டுமே காங்கிரஸின் முக்கிய இலக்கு” என்று கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஈரோட்டில் அனுமதியின்றி பிரச்சாரம்; சீமானுக்கு செக்! - தேர்தல் ஆணையம் நடவடிக்கை!

பொது சிவில் சட்டம் அமலுக்கு வரும் முதல் மாநிலம்.. இன்று முதல் அமல் என அறிவிப்பு..!

குரங்கு தள்ளிவிட்டதால் மாடியில் இருந்து கீழே விழுந்த 10ஆம் வகுப்பு மாணவி.. பரிதாப பலி..!

ஒரே நாடு ஒரே நேரம்.. வரைவு விதிகளை வெளியிட்ட மத்திய அரசு..!

தேநீர் விருந்து விஜய் மிஸ்ஸிங்.. யார் யாரெல்லாம் கலந்து கொண்டனர்?

அடுத்த கட்டுரையில்
Show comments