இண்டெல் நிறுவனத்தின் இணை நிறுவனர் ஜார்டன் மூரெ இன்று காலமானார்.
கடந்த 1968 ஆம் ஆண்டடு இண்டெல் நிறுவனத்தை ஜார்டன் மூரெ மற்றும் ராபர்ட் நைச் இருவரும் இணைந்து தொடங்கினர்.
கம்யூட்டர் உலகில் கம்யுடிங் சாதனங்கள் உருவாக்கத்தில் காரண கர்த்தாக்களில் ஒருவர் ஜார்டன் மூரெ. இவர் இன்று வரை புழக்கத்தில் இருக்கும் பல அரிய கம்யுடிங் சாதனங்களை உருவாக்கிய முன்னோடியாவார்.
இவர், தன் குடும்பத்தினருடன் ஹவாயில் உள்ள தன் வீட்டில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். இந்த நிலையில், நேற்றறு இயற்கையான முறையில், மூரெ உயிரிழந்ததாக இண்டெல் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், இன்றுவரை அமெரிக்காவில் உள்ள சிலிக்கான் வேலியின் மதிப்புமிக்க மனிதர்களில் ஒருவராக விளங்கிய ஜார்டன் மூரெயின் (94) மறைவுக்கு ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி டிம் கும், கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி சுந்தர் பிச்சை உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.