Publish Date: Fri, 23 Sep 2022 (07:38 IST)
Updated Date: Fri, 23 Sep 2022 (07:40 IST)
உலகின் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்று இன்ஸ்டாகிராம் என்பதும் இதில் பல திரையுலக பிரபலங்கள் தொழிலதிபர்கள் கணக்கு வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் இணையதளம் திடீரென உலகம் முழுவதும் முடங்கியதாகவும் இதனால் பயனர்கள் கடும் அதிர்ச்சி அடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
உலகின் பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 11.45 மணிக்கு திடீரென இன்ஸ்டாகிராம் முடங்கியது. ஆனால் அடுத்த சில நிமிடங்களில் மீண்டும் இன்ஸ்டாகிராம் சேவை கிடைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ள
இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் முடங்கியதற்கு என்ன காரணம் என தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து வருவதாகவும் இனிமேல் இதுபோன்ற பிரச்சினைகள் இருக்காது என்றும் தெரிவித்துள்ளனர்.