Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

3 நாளைக்கு கழிவறைக்கே போகக் கூடாது! – புதுமண தம்பதிகளுக்கு பழங்குடி மக்கள் வைக்கும் செக்!

Advertiesment
3 நாளைக்கு கழிவறைக்கே போகக் கூடாது! – புதுமண தம்பதிகளுக்கு பழங்குடி மக்கள் வைக்கும் செக்!
, ஞாயிறு, 22 மே 2022 (13:55 IST)
இந்தோனேசியாவில் புதுமண தம்பதிகள் திருமணமாகி 3 நாட்களுக்கு கழிவறை பயன்படுத்தக் கூடாது என்ற விநோத வழக்கம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் ஆண் – பெண் இடையே திருமணம் என்ற அம்சன் பொதுவானதாக இருந்தாலும், திருமண முறைகள், சடங்குகள் நாட்டுக்கு நாடு, மக்களுக்கு மக்கள் பெரிதும் மாறுபடுகின்றன. அதில் சில திருமண சடங்குகள் ஆச்சர்யத்தை ஏற்படுத்துவதாக இருக்கும்.

அப்படியான ஒரு சடங்கு இந்தோனேஷியா பழங்குடி மக்களிடையே உள்ளது. இந்தோனேசியாவை சேர்ந்த திடாங் பழங்குடியை சேர்ந்த மக்கள் திருமணமான புதுமண தம்பதிகள் 3 நாட்களுக்கு கழிவறையை பயன்படுத்தக் கூடாது என்று விதிமுறை வைத்துள்ளார்களாம்.

இந்த விதிகளை பின்பற்றாத தம்பதிகளுக்கு திருமண முறிவு, குழந்தைகள் உயிரிழப்பது போன்ற கேடு சம்பவங்கள் நடைபெறும் என அஞ்சுகின்றனர். இதனால் புதுமண தம்பதிகள் கழிவறை பயன்படுத்தாமல் இருப்பதை உறவினர்கள் கண்காணிப்பாளர்களாம். இந்த சம்பவம் பலருக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உங்களுக்குதான் கண்ணீரே கிடையாதே..! – கே.எஸ்.அழகிரிக்கு சீமான் பதில்!