இந்தோனேஷியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர கன்னித்தன்மை சோதனை கட்டாயமாக இருந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுள்ளது.
இந்தோனேஷியாவில் பெண்கள் ராணுவத்தில் சேர்வதற்கு பல தகுதிகளோடு, கன்னித்தன்மையும் முக்கிய தகுதியாக இருந்து வந்தது. இந்நிலையில் கடந்த 2014ல் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் பெண்கள் பாலியல் தாக்குதலுக்கு உள்ளாதல் மற்றும் மருத்துவரீதியான காரணங்களால் கன்னித்தன்மை சோதனை என்பது அறிவியல் அடிப்படை இல்லாதது என அறிவித்தது.
இந்நிலையில் பல ஆண்டுகள் கழித்து இந்தோனேஷியாவில் இந்த கன்னித்தன்மை சோதனை நிறுத்தப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதுதவிர பெண்களின் உடல்திறன் சோதனை உள்ளிட்ட தகுதிகள் வழக்கம்போல அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.