Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மாஸ்க் போடலைனா குழிய தோண்டிட வேண்டியதுதான்! – பதறி போய் மாஸ்க் அணியும் மக்கள்!

Advertiesment
World
, செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (16:55 IST)
கொரோனா பரவி வரும் சமயத்தில் மாஸ்க் அணியாதவர்களுக்கு இந்தோனிஷியாவில் வழங்கப்படும் நூதன தண்டனையால் மக்கள் பயந்து மாஸ்க் அணிந்து வருகின்றனர்.

உலகம் முழுவதிலும் கொரோனா பரவல் அதிகமாக உள்ளதால் பொது இடங்களுக்கு செல்லும்போது மாஸ்க் அணிய வேண்டும் என்பது பல நாடுகளில் கட்டாயமாக உள்ளது. ஆனால் பெரும்பாலும் மக்கள் அதை பின்பற்றுவது இல்லை.

இந்நிலையில் இந்தோனிஷியாவின் ஜாவா பகுதியில் மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்களுக்கு நூதன தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாமல் வெளியே வருபவர்கள் அப்பகுதியில் கொரோனாவால் இறந்தவர்களுக்கு சவக்குழி தோண்டும் பணியை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் இந்த தண்டனைக்கு பலர் பயந்து மாஸ்க் அணிந்து வந்தாலும், சவக்குழி தோண்ட போதுமான ஆட்கள் இல்லாத பற்றாக்குறையை தீர்க்கவும் இந்த தண்டனை பயன்படும் என்கிறார்கள் ஜாவா அதிகாரிகள்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

TIK TOK-க்குப் போட்டியாக களமிறங்கும் YouTube ஷார்ட்ஸ் ! 15 வினாடிகளில் வீடியோ