இன்று அமெரிக்கா செல்கிறார் பிரதமர் மோடி.. ஐநா தலைமையகத்தில் யோகா கொண்டாட்டம்.!

Webdunia
செவ்வாய், 20 ஜூன் 2023 (08:11 IST)
அமெரிக்க அதிபரின் அழைப்பை ஏற்று இன்று பிரதமர மோடி அமெரிக்க செல்கிறார் என்றும் அமெரிக்காவில் ஐநா தலைமையகத்தில் நடைபெறும் யோகா தின கொண்டாட்டத்தில் கலந்து கொள்கிறார் என்றும் அதனை அடுத்து அமெரிக்க நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அவர் உரையாற்றுகிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளன. 
 
அமெரிக்க அதிபர் ஜோபைடன்  மற்றும் அவரது மனைவி அழைப்பின் பேரில் அமெரிக்க செல்லும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். 
 
இதனை அடுத்து வாஷிங்டன் செல்லும் மோடி அமெரிக்க அதிபர் தரும் இரவு விருந்தில் கலந்து கொள்கிறார். இதனை அடுத்து அமெரிக்காவில் உள்ள இந்திய வம்சாவளியினர் தொழிலதிபர்களை சந்திக்கும் அவர் அமெரிக்கா அதிபர் ஜோபைடன் உடன் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார் என்றும் சில புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து விடுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
அமெரிக்க நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு ஜூன் 24, 25 தேதிகளில் எகிப்து நாட்டுக்கு பிரதமர் மோடி பயணம் செய்கிறார் என்றும் அந்நாட்டு தலைநகர் கெய்ரோவில் உள்ள மசூதிக்கு செல்ல இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டேன்ஸ் ஆடலாம்.. தெருவுல நடந்தால் விஜய்க்கு முட்டி வலிக்கும்!.. மன்சூர் அலிகான் ராக்ஸ்!...

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ விசாரணைக்கு தடை விதித்தது உச்ச நீதிமன்றம்

பிகாரில் வீசும் அதே அலை தமிழகத்திலும் வீசுகிறது: கோவையில் பிரதமர் மோடி பேச்சு

கருமுட்டையை உறைய வைத்து வேலையில் கவனம் செலுத்துங்கள்: ராம்சரண் மனைவியின் சர்ச்சை கருத்து..!

பிரதமர் மோடியின் காலில் விழுந்து ஆசி பெற்ற ஐஸ்வர்யா ராய்.. புகைப்படம் வைரல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments