ராமநாதபுரத்தில் பிரதமர் மோடி போட்டியிடப் போவதாகவும் அவர் வெற்றி பெற்றால் தமிழக எம்பி தான் பிரதமராக ஆவார் என்றும் தமிழக பாஜகவினர் கூறி வருகின்றனர்.
சமீபத்தில் அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை தந்த போது தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்படும் ஒருவர்தான் பிரதமர் வேட்பாளராக வருவார் என்று கூறியிருந்தார். அந்த வகையில் தமிழகத்தில் உள்ள ராமநாதபுரம் தொகுதியில் பிரதமர் மோடி போட்டியிடப் போவதாகவும் அவர் அந்த தொகுதியில் வெற்றி பெற்றால் பிரதமர் ஆவார் என்பதால் அமித்ஷா சொன்னபடி தமிழக எம்பி தான் பிரதமராக வருவார் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இராமநாதபுரம் மாவட்டம் என்பது ராமேஸ்வரம் புனித தலம் உள்ள பகுதியாக என்பது மட்டுமின்றி ராமர் பாலமும் இருப்பதால் ராமர் கோயிலுக்கும் ராமநாதபுரத்திற்கும் சம்பந்தம் உண்டு என்பதால் பிரதமர் மோடி இந்த தொகுதியில் போட்டியிட விரும்புவதாக கூறப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் கூட்டணி இன்றி தனித்து போட்டு விடவே பாஜக விரும்புகிறது என்றும் கூறப்படுகிறது.