Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாப்பாட்டுக்கே வழியில்ல.. துபாயில் இந்திய இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்!

Advertiesment
சாப்பாட்டுக்கே வழியில்ல.. துபாயில் இந்திய இளைஞருக்கு அடித்த ஜாக்பாட்!
, வியாழன், 24 டிசம்பர் 2020 (09:38 IST)
கொரோனா காரணமாக வேலை இழந்ததால் கடன் தொல்லையால் தவித்து வந்த துபாயில் உள்ள இந்திய இளைஞருக்கு கோடி கணக்கில் லாட்டரி அடித்துள்ளது.

கேரள மாநிலம் காசர்கோடு பகுதியை சேர்ந்தவர் சஞ்சீவன். மனைவி மற்றும் குழந்தையுடன் துபாயில் வசித்து வரும் இவர் கொரோனா காரணமாக கடந்த சில மாதங்களாக வேலையில்லாமல் இருந்து வந்துள்ளார். மனைவியின் சம்பாத்தியத்தால் சாப்பாடு பிரச்சினை மட்டும் இல்லாமல் இருந்த நிலையில் கடன் தொல்லை அதிகமாகி வந்திருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் தனக்கு ஏதாவது அதிசயம் நிகழாதா என்ற எண்ணத்தில் துபாய் லாட்டரி சீட்டு ஒன்றை வாங்கியுள்ளார் சஞ்சீவன், அவர் நினைத்தபடியே அவருக்கு அதிசயம் நிகழ்ந்ததுதான் ஆச்சர்யம். அவர் வாங்கிய லாட்டரி சீட்டுக்கு இந்திய மதிப்பில் 7 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.

இதனால் மகிழ்ச்சியில் திக்குமுக்காடியுள்ள அவர் இந்த தொகையில் தனது கடன்களை அடைத்துவிட்டு மீத பணத்தை லாபகரமாக முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார். துபாயில் லாட்டரியில் பரிசு வெல்லும் 171வது இந்தியர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அது வேற வாய் இது நாற வாய்... ஜில் ஜங் ஜக் சீமானை வச்சி செய்யும் விஜய் பேன்ஸ்!!