Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

லெபனானை விட்டு இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்: மத்திய அரசு உத்தரவு!

Advertiesment
லெபனானை விட்டு இந்தியர்கள் உடனே வெளியேறுங்கள்: மத்திய அரசு உத்தரவு!

Siva

, வெள்ளி, 2 ஆகஸ்ட் 2024 (07:50 IST)
லெபனான் நாட்டில் உள்ள இந்தியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே மோதல் அதிகரித்துள்ள நிலையில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக உடனே வெளியேற வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. சமீபத்தில் ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் என்பவர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு பதட்டமான நிலை ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் லெபனானில் உள்ள இந்தியர்கள் தாய்நாட்டுக்கு திரும்ப இந்திய தூதரகம் அறிவுறுத்தி உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.

இது குறித்து இந்திய தூதரகம் தனது சமூக வலைதள பக்கத்தில் ’லெபனான் பிராந்தியத்தில் தற்போது அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் மறு அறிவிப்பு வரும் வரை இந்தியர்கள் லெபனானுக்கு பயணம் செய்ய வேண்டாம் என்றும் ஏற்கனவே லெபனானில் உள்ள இந்தியர்கள் நாட்டை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் அத்தியாவசிய தேவை காரணமாக லெபனானில் தங்கி இருக்கும் இந்தியர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும் முடிந்தவரை வெளியே செல்வதை தவிர்க்குமாறும் இந்திய தூதரகத்தில் அவ்வப்போது தொடர்பில் இருக்கும் மாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ள [email protected] என்ற இமெயில் முகவரியும், +96176860128 என்ற அவசர தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Edited by Siva
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த 3 மணி நேரத்தில் 4 மாவட்டங்களில் மழை.. வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!