ஈரான் நாட்டின் ஹமாஸ் இயக்கத்தின் தலைவர் இஸ்மாயில் என்பவர், இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார் என்றும் அவரது வீட்டை குறிவைத்து இஸ்ரேல் படை தாக்குதல் நடத்தியதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளன.
இஸ்ரேல் - ஹமாஸ் இடையே கடந்த சில ஆண்டுகளாக போர் நீடித்து வரும் நிலையில் இந்த போரை நிறுத்த இந்தியா உள்பட பல நாடுகள் முயற்சித்தும் தொடர்ச்சியாக போர் நடந்து கொண்டிருக்கிறது.
இதுவரை இந்த போரில் 39 ஆயிரம் பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கிட்டத்தட்ட ஒரு லட்சம் பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹமாஸ் அமைப்பினர் மீதான தாக்குதலை இஸ்ரேல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் நிலையில் நேற்று இரவு நடத்திய தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் தலைவர் இஸ்மாயில் என்பவர் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
ஈரான் நாட்டின் அதிபர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இஸ்மாயில் வந்ததாகவும் அப்போது அவர் தங்கியிருந்த வீட்டை நோக்கி குறி பார்த்து இஸ்ரேல் படையினர் தாக்குதல் நடத்தியதாகவும் இந்த தாக்குதல் இஸ்மாயில் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.