Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரூ.60 கோடி கொடுத்து காருக்கு பேன்ஸி நம்பர் வாங்கிய இந்தியர்!

ரூ.60 கோடி கொடுத்து காருக்கு பேன்ஸி நம்பர் வாங்கிய இந்தியர்!
, திங்கள், 10 அக்டோபர் 2016 (19:09 IST)
துபாயிலுள்ள JW மேரியாட் நட்சத்திர ஓட்டலில் வாகனங்களுக்கான பேன்ஸி நம்பர் பிளேட் ஏலத்திற்கு போக்குவரத்து துறையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

 
 
அங்கு பேன்ஸி நம்பர் பிளேட்டுகளை ஏலத்தில் எடுக்க 300க்கும் மேற்பட்ட பெரும் பணக்காரர்கள் குழுமியிருந்தனர். அந்த அரங்கத்தில் இருந்த பிரம்மாண்ட திரையில் பேன்ஸி நம்பர்கள் காண்பிக்கப்பட்டு ஏலம் விடப்பட்டது. பல பேன்ஸி நம்பர் பிளேட்டுகள் ஏலம் விடப்பட்டன.
 
அதில், அதிகபட்ச விலை கொண்ட D 5 என்ற பேன்ஸி நம்பர் பிளேட்டும் ஏலத்திற்கு வந்தது. அதற்கு அடிப்படை விலையாக 20 மில்லியன் திராம்ஸ் நிர்ணயிக்கப்பட்டது. ஐக்கிய அரபு நாடுகளில் ஒற்றை மற்றும் இரட்டை இலக்க வண்ண நம்பர் பிளேட்டுகளை தங்களது செல்வ வளம் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாக கருதுகின்றனர்.

இதனால், அந்த D 5 நம்பர் பிளேட்டை ஏலத்தில் எடுக்க பெரும் போட்டி நிலவியது. இந்த ஏலத்தில் பங்கு கொண்ட துபாய் வாழ் இந்திய தொழிலதிபரான பல்விந்தர் சஹானி, அந்த நம்பர் பிளேட்டை 33 மில்லியன் திராம்ஸ் விலைக்கு கேட்டு அரங்கத்தை அதிர வைத்தார்.
 
அங்கு குழுமியிருந்த அரபு ஷேக்குகளே இந்த விலையை கேட்டு அதிர்ந்தனர். இந்த விலையை விட அதிகம் கொடுக்க யாரும் தயாராக இல்லை. 
பல்விந்தர் சஹானியிடம் இருக்கும் பல ரோல்ஸ்ராய்ஸ் கார்கள் உள்ளன. அதில், ஒரு ரோல்ஸ்ராய்ஸ் காருக்கு இந்த D 5 என்ற பேன்ஸி நம்பரை பதிவு செய்ய அவர் முடிவு செய்திருக்கிறாராம்.  

கடந்த 2008ம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த சயீத் அல் கவுரி என்ற தொழிலதிபர் 52.2 மில்லியன் திராம்ஸ் விலையில் 1 என்ற பதிவு எண்ணை பெற்றதுதான் இதுவரை ஏலத்தில் விடப்பட்ட நம்பர் பிளேட்டுகளில் அதிக விலை கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. அதாவது, இந்திய மதிப்பில் ரூ.94.58 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தோனி மனைவி மீது கோடிக்கணக்கில் மோசடி புகார்!