Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

தோனி மனைவி மீது கோடிக்கணக்கில் மோசடி புகார்!

தோனி மனைவி மீது கோடிக்கணக்கில் மோசடி புகார்!
, திங்கள், 10 அக்டோபர் 2016 (18:48 IST)
இந்திய கிரிக்கெட் வீரர் தோனியின் மனைவி சாக்‌ஷி பல கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக கூறி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 

 
இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் மற்றும் டி20 கேப்டன் மகேந்திர சிங் டோனியின் மனைவி சாக்‌ஷி. ஹரியானாவைச் சேர்ந்த டெனிஷ் அரோரா என்பவர், சாக்‌ஷி தோனி மீது பல கோடி ரூபாய் மோசடி செய்ததாக கூறி டெல்லியில் உள்ள சுசந்த் லோக் காவல் நிலையத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
 
அந்த புகாரில் சாக்‌ஷி, ரிதி எம்.எஸ்.டி. அல்மோட் [Rhiti MSD Almode Pvt. Ltd] என்ற உடற்பயிற்சி நிறுவனத்தில் பங்குதாரராகவும் இயக்குநராகவும் இருந்ததாகவும், இதில் சாஷிக் டோனி, அருன் பாண்டே, சுபவதி பாண்டே, பிரதீமா பாண்டே ஆகியோர் பங்குதார்கள் எனவும் குறிப்பிட்டுள்ளது.
 
இதில் ஒப்பந்த தொகையாக 11 கோடி ரூபாய் தருவதாக பேசப்பட்டதாகவும், ஆனால் இவர்கள் நிறுவனம் சார்பில் கடந்த மார்ச் 31ஆம் தேதி வரையிலும் 2.25 கோடி ரூபாய் மட்டுமே தான் தந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
இதனால் மீதித் தொகையை கேட்டு டெனிஷ் அரோரா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், கம்பெனி செலுத்த வேண்டிய பங்கினை அரோராவிற்கு கொடுக்கப்பட்டுவிட்டதாக அருண் பாண்டே கூறியுள்ளார்.
 
மேலும் பாண்டே கூறுகையில், தோனியின் மனைவியான சாஷி இந்நிறுவனத்தின் பங்கு தாராராக இருந்து விலகி ஒரு வருடம் ஆன நிலையில் அவர் மீது வழக்குப் பதிவு செய்வது இயலாது என்று கூறியுள்ளார். இது விளையாட்டு உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஸ்வினின் மாய சுழலில் சிக்கி சின்னாபின்னமானது நியூசிலாந்து: 299 ரன்களுக்கு ஆல் அவுட்