Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜோ பைடனை கொலை செய்ய முயற்சித்த இந்திய வம்சாவளி இளைஞர் கைது!

Webdunia
புதன், 24 மே 2023 (17:59 IST)
அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய முயற்சி செய்த இந்திய வம்சாவளியை சேர்ந்த இளைஞர் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு  வெள்ளை மாலையில் மிகப்பெரிய பாதுகாப்பு உண்டு என்பதும் உலகின் மிகவும் பாதுகாப்பு உள்ள மாளிகைகளில் ஒன்று வெள்ளை மாளிகை என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனை கொலை செய்ய பாதுகாப்பு தடுப்புகளை மீறி வெள்ளை மாளிகைக்குள் டிரக்கை இந்திய வம்சாவளி இளைஞர் ஒருவர் ஓட்டி வந்ததாக தெரிகிறது. அவரை கைது செய்த அமெரிக்க காவல்துறையினார் அவரை விசாரணை செய்த போது அவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்றும் அவரது பெயர் சாய் வர்ஷித் என்றும் கூறப்படுகிறது. 
 
டிரெக்கில் எந்தவிதமான ஆயுதமும் வெடிகுண்டும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் ஆனால் அதே நேரத்தில் அதிபரை கடத்தி கொலை செய்ய முயன்றதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கோவையில் சட்டவிரோதமாக துப்பாக்கி விற்பனை.. 3 பேர் கைது..!

பேருந்து ஓட்டும் போது செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்; ஓட்டுனர்களுக்கு எச்சரிக்கை

இந்திய பயணத்தை முடித்த கையோடு சீனா செல்லும் இலங்கை அதிபர்.. முக்கிய பேச்சுவார்த்தை..!

நடிகர் அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.. 8 பேர் கைது..!

தமிழ்நாட்டில் 6 நாட்களுக்கு மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments