புதுவையில் இருந்து ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் வெளியேற வேண்டும் என்ற கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்திய 50க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளன.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு அதிகாரம் என சமீபத்தில் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கிய நிலையில் இந்த தீர்ப்பு டெல்லிக்கு மட்டுமே பொருந்தும் என்றும் புதுச்சேரிக்கு பொருந்தாது என்றும் புதுவை ஆளுனர் தமிழிசை கருத்து தெரிவித்தார்.
இதனை அடுத்து அவருக்கு கண்டனம் தெரிவித்த சமூகநல அமைப்பினர் ஒன்று திரண்டு புதுவையில் இருந்து ஆளுநர் தமிழிசை வெளியேற வேண்டும் என்று கோஷமிட்டனர். புதுவை கவர்னர் மாளிகையை நோக்கி அவர்கள் சென்றபோது காவல்துறையினர் தடுப்பு அமைத்து தடுத்தனர். ஆனால் அந்த தடுப்பையும் மீறி செல்ல முயன்றதை அடுத்து காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர் இதில் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாகவும் அதன் பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து போராட்டம் நடத்திய ஒருவர் கூறிய போது புதுச்சேரியில் தனக்கு மட்டுமே அதிகாரம் உள்ளதாக கருதி அமைச்சரவைக்கே தெரியாமல் அரசு நிர்வாகத்தில் ஆளுநர் நேரடியாக தலையிடுகிறார் என்றும் அவர் புதுச்சேரியில் இருந்து வெளியேற வேண்டும் என்றும் கூறினார்.