Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4 நாட்களில் வறண்டு போன பாகிஸ்தான் நதி.. செயற்கைகோள் அதிர்ச்சி புகைப்படம்..!

Mahendran
புதன், 30 ஏப்ரல் 2025 (19:15 IST)
பெஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு செல்லும் நதிநீரை இந்தியா நிறுத்தி வைத்த நிலையில், நான்கு நாட்களில் பாகிஸ்தான் நதி வறண்டு போய், பாலைவனம் போல் காட்சி அளிப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
சிந்து, ஜீலம், செனாப் ஆகிய மூன்று நதிகள் பாகிஸ்தானுக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், அந்த நதிகளுக்கு இந்தியா வழியாகத்தான் தண்ணீர் பாய்கிறது. இது குறித்த ஒப்பந்தம் கடந்த 1960 ஆம் ஆண்டு கையெழுத்தான நிலையில், இந்த மூன்று நதி நீரை வைத்து தான் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த நீர் ஆதாரம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த நிலையில் பெஹல்காம் தாக்குதல் காரணமாக, இந்தியா சிந்து நதி ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்ட நிலையில், தற்போது குடிநீர் மற்றும் வேளாண்மைக்கு தண்ணீர் கிடைக்காத நிலை பாகிஸ்தானுக்கு ஏற்பட்டுள்ளது.
 
ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லாமல் வறண்டு கிடக்கும் ஆறுகள் குறித்த செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியாகி, பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
‘இந்தியாவை சீண்டிய பாகிஸ்தானுக்கு இது தக்க பதிலடிதான்’ என நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சீமான் தலை துண்டிக்கப்படும்.. இமெயில் மிரட்டல் விடுத்த மர்ம நபரால் பரபரப்பு..!

5 மாநிலத்தில் ஒரு பாகிஸ்தானியர் கூட இல்லை.. இந்தியாவில் இருந்து 786 பேர் வெளியேற்றம்..!

விஜய் அமைத்த ஒழுங்கு நடவடிக்கை குழு.. கட்சி விதியை மீறினால் கடும் நடவடிக்கை..!

பயங்கரவாதிகளை திருமணம் செய்த 60 பாகிஸ்தான் பெண்கள் நாடு கடத்தல்.. இந்தியா அதிரடி..!

அடுத்த கட்டுரையில்
Show comments