இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நிலைமைகள் பதற்றமாக இருந்தபோது, துருக்கி வெளிப்படையாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக ட்ரோன்களை அனுப்பியது. அதோடு, துருக்கி கடற்படை தனது போர் கப்பல்களையும் பாகிஸ்தானுக்காக அனுப்பியது. நான்கு நாட்கள் நீடித்த இந்த ராணுவ மோதலுக்கு பிறகு போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தியா துருக்கியை முழுமையாக புறக்கணிக்க முடிவு செய்தது.
இந்த முடிவால், துருக்கிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இந்திய வியாபாரிகள் துருக்கியில் இருந்து மார்பிள், ஆப்பிள் போன்ற பொருட்களை வாங்க மறுத்தனர். சுற்றுலா பயணிகளும் துருக்கி செல்லும் திட்டங்களை ரத்து செய்தனர்.
இந்திய விமான நிலையங்களில் பல ஆண்டுகளாக சேவையளித்து வந்த துருக்கியின் முக்கிய தரை சேவை நிறுவமான Celebi, தற்போது சர்ச்சைக்குரியதாக மாறியுள்ளது. தேசிய பாதுகாப்பின் காரணமாக இந்தியா அதன் சேவையை ரத்துசெய்தது. இந்த முடிவால், இரண்டு நாட்களில் மட்டும் அந்த நிறுவனம் ரூ.2,500 கோடி இழந்தது.
இந்த நிறுவனத்தில் துருக்கி அதிபர் எர்டோகனின் மகள் சுமயா எர்டோகனுக்கு பெருமளவு பங்குகள் உள்ளதால், அவருக்கும் நேரடியாக மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது.
இதன் பின்னணியில், செலிபியின் பங்குகள் 20% வீழ்ச்சி கண்டது. Istanbul பங்குச் சந்தையில் அதன் பங்கு விலை 2,224 லீராவாக இறங்கியது. இது இதற்கு முந்தைய நிலைமையை விட 10% குறைவாகும். இது இந்தியாவை பகைத்து கொண்டதால் ஏற்பட்ட நஷ்டமாக பார்க்கப்படுகிறது.