Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நான் தான் இந்தியா - பாகிஸ்தான் போரை நிறுத்தினேன்.. காமெடி அதிபராக மாறிய டிரம்ப்

Advertiesment
India Pakistan conflict

Mahendran

, வியாழன், 22 மே 2025 (10:48 IST)
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான சமீபத்திய மோதலை முடிவுக்கு கொண்டு வந்தது அமெரிக்காவின் தலையீடு என்றும், அதில் "வர்த்தகத்தின்" மூலம் தான் தாமே சுமூகமாக நடத்தியதாகவும் மீண்டும் தெரிவித்துள்ளார்.
 
தென்னாபிரிக்க அதிபர் சிரில் ரமபோசாவுடன் நடந்த சந்திப்பின் போது, டிரம்ப், "நாங்கள்  இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் நடுவில் பெரிய வேலை செய்தோம். மோதலை நாங்கள் முடிவுக்கு கொண்டுவந்தோம்; அதையும் வர்த்தகம் மூலமாக செய்தேன் என்று நினைக்கிறேன்," என கூறினார்.
 
காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்களை நடத்தியதில் இருந்து, இந்தியா–பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் நான்கு நாட்கள் கடுமையான மோதலில் ஈடுபட்டன. இதற்கு பதிலாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் நடவடிக்கையை மேற்கொண்டு பதிலடி கொடுத்தது.
 
மே 10 அன்று இருநாடுகளும் உடன்பாடுக்கு வந்ததை முதல் முறையாக டிரம்ப் அறிவித்தார். "அமெரிக்கா பேசினபின், முழுமையான உடனடி உடன்பாடு ஏற்பட்டது," என்றும், தாம் நடுவர் போல செயல்பட்டதாகவும் கூறினார்.
 
"இந்தியா என் நண்பர் மோடிக்கு சொந்தமான நாடு. பாகிஸ்தானில் நல்ல தலைவர்களும் நல்ல மக்களும் உள்ளனர். நான் இருவரையும் அழைத்தேன், நல்ல விஷயம்தான் நடந்தது," எனவும் டிரம்ப் தெரிவித்தார்.
 
மீண்டும் மீண்டும் நான் தான் இந்தியா பாகிஸ்தான் மோதலை நிறுத்தி வைத்தேன் என்று டிரம்ப் கூறியது காமெடியின் உச்சகட்டமாக உள்ளது என்று அமெரிக்காவில் உள்ள முன்னாள் முக்கிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். டிரம்ப் எப்போதுமே விளம்பரத்தை விரும்புபவர் என்றும் எல்லாமே தன்னால்தான் ஆனது என்று கூறும் பண்பை கொண்டவர் என்றும் அவர் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டெல்லியை தாக்க திட்டம்..? பாகிஸ்தான் உளவாளிகள் கைது! பரபரப்பு சம்பவம்!