வெளிநாட்டு சதியால் தான் நான் பாகிஸ்தான் பிரதமர் பதவியை இழந்தேன் என இம்ரான்கான் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
பண வீக்கத்தை கட்டுப்படுத்தவே நான் ரஷ்யா சென்றேன் என்றும் ரஷ்யாவில் இருந்து 30% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்க திட்டமிட்டேன் என்றும் பாகிஸ்தானுக்காக தனி வெளியுறவு கொள்கையை கடைபிடிக்க முயற்சி செய்தேன் என்றும் அவர் கூறினார்
சீனாவுடனான வர்த்தகத்தை படிப்படியாக அதிகரிக்க முடிவு எடுத்தேன் என்றும் ஆனால் என்னுடைய இந்த நடவடிக்கைகள் எதுவும் வெளிநாட்டு சக்திகளுக்கு பிடிக்கவில்லை என்பதால் அவர்களுடைய சாதியால் நான் பதவியிழந்தேன் என்றும் இம்ரான்கான் சமீபத்தில் நடந்த கூட்டமொன்றில் பேசியுள்ளார். மேலும் அவர் இந்தியாவை பாராட்டி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது