Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரசு அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை - பிரதமர் அதிரடி

அரசு அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை - பிரதமர் அதிரடி
, ஞாயிறு, 26 ஆகஸ்ட் 2018 (12:19 IST)
பாகிஸ்தானில் அரசு அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் பாகிஸ்தான் பிரதமராக கடந்த 18 ஆம் தேதி பதவியேற்றுக் கொண்டார். அவர்க்கு ஜனாதிபதி மம்னூன் உசேன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
 
அதில் பேசிய அவர் நாட்டு மக்களுக்காக செல்விடுவதை விட, நாட்டை ஆள்பவர்களுக்கே அதிகம் செலவழிக்கப்படுகிறது. ஆகவே செலவுகளை கட்டுப்படுத்த நான் பிரதமர் இல்லத்தில் தங்கப் போவதில்லை. அதற்கு பதிலாக இஸ்லாமாபாத்தில் ராணுவ செயலாளர் வீட்டில் தங்க இருக்கிறேன். பிரதமர் இல்லம் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக மாற்றப்படும். 
webdunia
பிரதமர் அலுவலகத்தில் உள்ள 33 புல்லட் புரூப் கார்கள் அனைத்தும் ஏலம் விடப்படும். அந்த பணம் மக்களின் சேவைக்காக பயன்படுத்தப்படும் என்று ஏற்கனவே கூறியிருந்தார்.
 
இந்நிலையில் நேற்று இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைச்சரவையின் கேபினட் கூட்டத்தில் பேசிய இம்ரான்கான் தலைவர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்ய தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். பிரதமர், ஜனாதிபதி ஆகியோர் சிறப்பு விமானம் பயன்படுத்த மாட்டோம் என இம்ரான் கான் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
 
நாட்டை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல அனைத்து விதமான அநாவசிய செலவுகளை குறைத்து, மக்களின் நலனுக்காக பாடுபடுவேன் என உறுதி அளிப்பதாக இம்ரான்கான் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிவாரண பொருட்களை திருடிய அரசு அதிகாரிகள் - கேரளாவில் அதிர்ச்சி