Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சித்துவுக்கு எதிராக தேச துரோக வழக்கு: இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் நடந்த சர்ச்சை

Advertiesment
இம்ரான்கான்
, திங்கள், 20 ஆகஸ்ட் 2018 (22:14 IST)
பாகிஸ்தான் பிரதமராக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் நேற்று பதவியேற்று கொண்ட நிலையில் இந்த விழாவில் இம்ரான்கான் காலத்து கிரிக்கெட் வீரரான சித்து, பாகிஸ்தான் நாட்டின் அழைப்பின் பேரில் கலந்து கொண்டார்.
 
இந்த நிகழ்ச்சியின்போது சித்து, பாகிஸ்தான் ராணுவ தளபதியை கட்டி அணைத்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார். இதுகுறித்த புகைப்படங்களும் வீடியோக்களும் இணணயதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது
 
webdunia
சித்துவுக்கு எதிராக பாஜகவினர் மட்டுமின்றி காங்கிரஸ் பிரமுகர்களும் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் பீகார் மாநிலம், முசாபர்பூரில் உள்ள காவல் நிலையத்தில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு எதிராக, தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு குறித்து விரைவில் காவல்துறை அதிகாரிகள் விசாரணை செய்யவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரசவத்திற்கு சைக்கில் ஓட்டி சென்ற நியூசிலாந்து அமைச்சர்!