Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3900 பணியாளர்களை பணியை விட்டு நீக்கும் ஐபிஎம்? – அதிர்ச்சியே வாழ்க்கையான ஐடி ஊழியர்கள்!

Webdunia
வியாழன், 26 ஜனவரி 2023 (15:41 IST)
சமீபமாக பிரபல ஐடி நிறுவனங்கள் பல தங்களது ஊழியர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில் ஐபிஎம் நிறுவனமும் பணிநீக்க நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

கடந்த சில காலமாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை காரணமாக ஐடி ஊழியர்கள் பலரை ஐடி நிறுவனங்கள் கொத்து கொத்தாக பணிநீக்கம் செய்து வருவது உலக அளவில ஐடி துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல நிறுவனங்களான கூகிள், அமேசான், மைக்ரோசாப்ட், விப்ரோ, ஸ்பாட்டிபை உள்ளிட்ட பல நிறுவனங்கள் பல்லாயிரக்கணக்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

அந்த வகையில் தற்போது பிரபலமான ஐபிஎம் நிறுவனமும் சுமார் 3900 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளது. இத்தனைக்கும் ஐபிஎம் ஆண்டு வளர்ச்சி விகிதம் கடந்த ஆண்டை விட 5 சதவீதம் உயர்ந்துதான் உள்ளது. எனினும் நிச்சயிக்கப்பட்ட இலக்கை அடையவில்லை என்பதால் பணி நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ முதன்மை தேர்வு தேதி திடீர் மாற்றம்.. புதிய தேதி என்ன?

ஒளரங்கசீப் பரம்பரையின் ரிக்‌ஷா ஓட்டுகின்றனர். யோகி ஆதித்யநாத் சர்ச்சை பேச்சு..!

இளம்பெண்ணுக்கு வந்த மின்சார பொருட்கள் பார்சல் பெட்டியில் ஆண் பிணம்.. அதிர்ச்சி சம்பவம்..!

ஆந்திரா சென்ற புயல், மீண்டும் தமிழகம் திரும்புகிறதா? தமிழ்நாடு வெதர்மேன் தரும் தகவல்..!

அடுத்த கட்டுரையில்
Show comments