Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

6 சதவீதம் பணியாளர்கள் நீக்கம்; ஸ்பாடிஃபை அறிவிப்பு! – அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!

6 சதவீதம் பணியாளர்கள் நீக்கம்; ஸ்பாடிஃபை அறிவிப்பு! – அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்!
, செவ்வாய், 24 ஜனவரி 2023 (09:54 IST)
கடந்த சில மாதங்களாக பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை பணிநீக்கம் செய்து வரும் நிலையில் அந்த பட்டியலில் பிரபல ம்யூசிக் நிறுவனமான ஸ்பாட்டிஃபையும் இணைந்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா, உக்ரைன் போர் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பெரிய அளவில் பொருளாதார மந்தநிலை எழுந்துள்ளது. இதனால் பல்வேறு ஐடி நிறுவனங்கள் தங்கள் பணியாளர்கள் பலரை பணிநீக்கம் செய்து வருகிறது.

முன்னதாக கூகிள், மைக்ரோசாப்ட், அமேசான் உள்ளிட்ட பல முன்னணி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கில் தங்கள் பணியாளர்களை வேலைவிட்டு நீக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்த வகையில் தற்போது பிரபலமான மியூசிக் தளமான Spotify தனது பணியாளர்களில் 6 சதவீதம் பேரை பணிநீக்கம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.

ஸ்பாட்டிஃபை நிறுவனத்தில் 10 ஆயிரம் பணியாளர்கள் உலகம் முழுவதிலுமிருந்து பணியாற்றி வருகின்றனர். இதில் 600 பேர் பணிநீக்கம் செய்யப்பட உள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. தொடர்ந்து ஐடி ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு வருவதால் ஐடி பணியாளர்கள் பீதியில் உள்ளனர்.

Edit By Prasanth.K

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கவர்னர் மாளிகையில் திடீர் தீ விபத்து: பெரும் பரபரப்பு