Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

Advertiesment
டாலர்ல கைய வெச்சா 100% வரி விதிப்பேன்! இந்தியா உள்ளிட்ட நாடுகளை எச்சரிக்கும் ட்ரம்ப்! - ஏன் தெரியுமா?

Prasanth Karthick

, வெள்ளி, 31 ஜனவரி 2025 (17:09 IST)

ப்ரிக்ஸ் நாடுகள் தனி பண மதிப்பை ஏற்படுத்தும் முயற்சி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள ட்ரம்ப், மீறும் நாடுகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பேன் என்றும் எச்சரித்துள்ளார்.

 

சர்வதேச வணிகத்தில் அமெரிக்காவின் டாலர் மதிப்பே சந்தைப்பணமாக இருந்து வரும் நிலையில் பல நாடுகள் இதற்கு எதிரான கருத்துகளையும் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ப்ரிக்ஸ் அமைப்பில் உள்ள இந்தியா, ரஷ்யா, பிரேசில், சீனா, எகிப்து, ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் இணைந்து சர்வதேச வணிகத்திற்கு தனி பண மதிப்பை தங்களெக்கென உருவாக்குவது என முடிவு செய்திருந்தன.

 

இந்நிலையில் ப்ரிக்ஸ் நாடுகளின் இந்த எண்ணம் குறித்து எச்சரிக்கை விடுக்கும் விதத்தில் தனது ட்ரூத் என்ற சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டொனால்டு ட்ரம்ப் “ப்ரிக்ஸ் நாடுகள் டாலரிலிருந்து விலகிச் செல்ல முயல்கின்றன. இதை நாம் ஒதுங்கி நின்று பார்த்த காலம் முடிந்துவிட்டது. புதிய பிரிக்ஸ் நாணயத்தை உருவாக்கவோ அல்லது அமெரிக்க டாலரை தவிர வேறு எந்த நாணயத்தையும் ஆதரிக்கவோ முயல மாட்டோம் என இந்த நாடுகள் உத்தரவாதம் அளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் 100 சதவீதம் வரிகளை எதிர்கொள்ள நேரிடும்” என எச்சரிக்கை விடுக்கும் தொனியில் பேசியுள்ளார்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமாருக்கு பதவி.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!