Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அந்த நடிகரின் மீது ஈர்ப்பு அதிகம் – மனைவியைக் கொலை செய்து கணவனும் தற்கொலை !

Advertiesment
அந்த நடிகரின் மீது ஈர்ப்பு அதிகம் – மனைவியைக் கொலை செய்து கணவனும் தற்கொலை !
, புதன், 13 நவம்பர் 2019 (09:16 IST)
பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் மேல் அளவுக்கதிகமான ஈர்ப்பு கொண்டிருந்த மனைவியைக் கணவன் கழுத்தை நெறித்து கொலை  செய்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது.

அமெரிக்க வாழ்ந்து வரும் இந்தியரரான தினேஷ்வர் பட்திதஸ், டோன்னி ஜொஜோய் என்ற பெண்ணைக் காதல் திருமணம் செய்துகொண்டார். ஆனால்  இவர்களின் காதல் திருமணத்துக்குப் காணாமல் போயுள்ளது.. இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டுள்ளனர்.

ஒருநாள் வாக்குவாதத்தின் போது கோபமடைந்த தினேஷ்வர் டோன்னியின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தினேஷ்வர் குற்றவாளி என முடிவு செய்யப்பட்டு விரைவில் தீர்ப்பு வரவுள்ளது. இந்நிலையில் கணவர் மேல் கொண்ட அன்பால் சமாதானமாக போக விரும்பிய டோன்னி தன் கணவரை சந்திக்க அவரது இல்லத்துக்கு சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் எழுந்து டோன்னியின் கழுத்தை நெறித்து கொலை செய்துவிட்டு தினேஷ்வரும் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதையடுத்து போலிஸார் விசாரணை நடத்த டோன்னியின் அண்ணன் ‘ என் தங்கைக்கு பாலிவுட் நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் மேல் அளவு கடந்த ஈர்ப்பு உண்டு. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாத பொறாமையால்தான் தினேஷ்வர் அவரிக் கொலை செய்துள்ளார்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சாக்குப்பையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – காதலுக்காக தாய் செய்த கொடூரம் !