Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சாலையெங்கும் இறந்து கிடந்த பறவைகள்! – இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி!

Advertiesment
சாலையெங்கும் இறந்து கிடந்த பறவைகள்! – இயற்கை ஆர்வலர்கள் அதிர்ச்சி!
, சனி, 14 டிசம்பர் 2019 (19:31 IST)
பிரிட்டன் அருகே உள்ள வேல்ஸ் பிராந்தியத்தில் பல நூறு பறவைகள் சாலையெங்கும் இறந்து கிடக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரிட்டன் ஆளுகைக்கு உட்பட்ட வேல்ஸ் பிராந்தியத்தில் உள்ள நீண்ட சாலை ஒன்றில் பல மீட்டர் தூரத்திற்கு சிறு பறவைகள் பல இறந்து கிடந்துள்ளன. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பறவைகள் ஆர்வலர்களும், காவல் துறையும் பறவைகளின் சடலங்களை அப்புறப்படுத்தினர்.

திடீரென இவ்வளவு பறவைகள் ஒரே சாலையில் மரணித்து கிடப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பறவைகள் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பறவைகள் இறந்த பகுதியில் இருந்த சிலர் அவை சாலையில் கூட்டமாக வந்து இறங்கியதாகவும், பிறகு வரிசையாக மயங்கி விழுந்து இறந்ததாகவும் கூறியுள்ளனர். இந்த பறவைகள் எங்கிருந்து பறந்து வந்தன என்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மேடையில் ஏறும் போது தடுக்கி விழுந்த பிரதமர் மோடி...